வில்லன் கெட்டப்பில் கார்த்தி- ஹீரோவாக சூர்யா!
வித்தியாசமான திரைக்கதை, புதுவிதமான ஒளிப்பதிவினால், ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துக்கொண்டிருக்கும் , 'பையா' ஸ்மாஷ்ஹிட்டினை தொடர்ந்து, படுகுஷியில் இருக்கும் கார்த்தி, திடீரென வித்தியாசமான ஆசை ஒன்றை கூறியுள்ளார். தனது அண்ணன் சூர்யாவுடன் இணைந்து ஒரு படம் நடிக்க வேண்டும்.
அதுவும் சூர்யா ஹீரோவாக நடிக்க, தான் வில்லனாக, நடிக்க வேண்டுமாம்! இத்ற்கு சூர்யாவிடமிருந்து நல்ல பதில் கிடைத்துள்ள போதும், பாலா அல்லது லிங்குசாமிதான் சரியான திரைக்கதையை தயார் செய்யக்கூடியவர்கள் என காத்திருக்கிறாராம் கார்த்தி. இருவரில் ஒருவராவது கார்தியின் ஆசையை நிறைவேற்றுவார்களா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தற்சமயம் 'நான் மகான் அல்ல' திரைப்படத்தில் இருக்கும் படுபிஸியாக இருக்கும் கார்த்தி, அடுத்து நடிக்கவிருக்கும் படம் 'விக்ரமாக்குது' எனும் தெலுங்கு ரீமேக்.
ஏன் படங்களில் ஒப்பந்தமாவதில் இத்தனை வேகம் என கேட்டால், பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன் இரண்டுமே தனது ஆரம்ப சினிமா வாழ்க்கையின் நீண்ட காலத்தினை எடுத்துக்கொண்ட படங்கள் என்பதால், இனிமேல் அந்த தாமதத்தை தவிர்த்துக்கொள்ளவாம்! (அது சரி அடுத்த படத்திலும் தமனாவாமே..?)