பிரபல நிறுவனத்துடன் அஜித்குமார் ஒப்பந்தம்


உலகத் தரம் வாய்ந்த மோட்டார் கார் பந்தைய வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து நிர்வாகம் செய்யும் பிரபல நிறுவனம் EURASIA MOTOR SPORTS MANAGEMENT.அதன் இயக்குனர் PIERS-HONNIST. இருபைத்தந்து வருடங்களுக்கும் மேலாக இத்துறையில் தேர்ந்தவர் மட்டுமல்ல…முன்னாள் கார் பந்தைய வீரரும் ஆவார்.மோட்டார் கார் பந்தைய வீரர்களுக்கான பந்தைய நுணுக்கங்களை மட்டுமல்ல…அவர்களுடைய விளம்பர வணிகத்தையும் நிர்வாகம் செய்வதில் பிரசித்தி பெற்ற நிறுவனம் இது.
பிரபல கார் பந்தைய வீரர் நரேன் கார்த்திகேயனின் F1 பங்களிப்பை தொடர்ந்து அவரது இதர பந்தயங்களையும் இவர்கள் தான் நிர்வகிக்கிறார்கள்.சமீபத்தில் இந்த நிறுவனம் அஜித்குமாருடன் ஒப்பந்தம் செய்துள்ளது.இந்த நிறுவனமே இனி அஜித்குமாரின் தொழில் ரீதியான மோட்டார் கார் பந்தயங்களை நிர்வகிக்கும்.
F2 போட்டி என்பது F1 க்கான கடைசி நுழைவுவாயில் என்பது குறிப்பிடத்தக்கது.2010 F1&F2 போட்டி ஏப்ரல் 16-ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள சில்வர்ஸ்டோன் நகரில் தொடங்கவிருக்கிறது.இதற்கான முன்னேற்பாடு குறித்து விவாதிக்கவும்,பயிற்சி எடுக்கவும் கடந்த 28-ஆம் தேதி இங்கிலாந்துக்கு கிளம்பி போயிருக்கிறார்.
எண் 28 உடன் கூடிய FMSCI சின்னத்துடன் போட்டியிடும் அஜித்குமார் தனது கனவை மட்டுமின்றி… சக இந்தியர்களான நரேன் கார்த்திகேயன்,அர்மன் இப்ராஹிம்,கருண் சந்தோக்,பார்த்திவ்சுரேஷ்வரன் ஆகியோரையும் ஊக்குவித்து… உற்சாகப்படுத்திய F1 அமைப்புக்கு இச்செயல் மூலம் நன்றி தெரிவிக்கிறார்.
அஜித்குமாருடன் இணைந்து பணிபுரிவது மகிழ்ச்சிகரமானது.அவருடைய ஆர்வமும்,உற்சாகமும் அவருடைய முயற்சிக்கு 110 சதவிகிதம் கை கொடுக்கும். F3 போட்டியில் கலந்து கொண்டு சிலவருட இடைவெளிக்குப் பிறகு இப்போது போட்டியில் பங்கெடுக்கிறார்.இருந்தாலும் இரண்டொரு சுற்றிலேயே அவருடைய வேகம் கூடும்…அவருடைய விடாமுயற்சியும் ஆர்வமும்…அவரை நிச்சயம் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று சொல்கிறார் PIERS-HONNIST.
Blogger இயக்குவது.