முட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)
தேவையான பொருட்கள்
1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால்
200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம்
1/2 தேக அப்பச்சோடா
70 மில்லி கொதிக்கும் நீர் (1/2 கப்பிற்கு சிறிது குறைவாக எடுக்கவும்)
115 கிராம் ரவை ( 100கிராம் ரவை + 15 கிராம் மா அல்லது 75 கிராம் ரவை + 40 கிராம் மா என கலந்து பாவிக்கலாம்)
125 கிராம் மாஜரீன் அல்லது பட்டர்
1 தேகரண்டி பேக்கிங் பவுடர்.
15 கிராம் கஜூ
1தேக வனிலா எசன்ஸ்
- பேரிச்சம்பழத்தை சிறிதாக வெட்டி 1/2 தேக அப்பச்சோடா, 70 மில்லி கொதிதண்ணீர் சேர்த்து 2 மணிநேரம் ஊறவிடவும்.
- ரவையை வறுத்து எடுக்கவும்.
- மாஐரீன், ரின்பால் இரண்டையும் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
- பின்பு கொதி நீரில் ஊறிய பேரிச்சம் பழத்தைப் போட்டு அடுக்கவும். அல்லது நன்றாக கலக்கவும்.
- பின்பு வறுத்த ரவை, மா, வனிலா, கஜூ இவற்றைச் சேர்த்து கலக்கி தட்டில் இட்டு மேலே சிறிது வெட்டிய கஜூ தூவி 180°cல் 30 நிமிடங்கள் பேக்(Bake) பண்ணி எடுக்கவும்.
- கேக் கலவையின் உயரத்தைப் பொறுத்து பேக் பண்ணும் நேரம் மாறும். 30 -45 நிமிடங்கள் தேவைப்படும்.
- பேக் பண்ணிய கேக். 3 1/2 cm அளவான உயரத்தில் மென்மையாகக் கிடைக்கும்.