யாழ்ப்பாணத்தில் திடீரென மரணித்தவருக்கு கொரோனாவா? வைத்தியர் கூறிய தகவல்


Jaffna Hospital, Sri Lanka

கம்போடியா நாட்டிலிருந்து இலங்கை திரும்பியவர், உடல் நலக்குறைவால் பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக இன்று அதிகாலை இரண்டு மணியளவில் கொண்டுவரப்பட்ட பின், திடீரென உயிரிழந்துள்ளார்.

எனினும் இவருக்கு கொரோனாத் தொற்று இல்லை என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கம்போடியா நாட்டிற்கு சென்று திரும்பி வந்தவர் என்பதால் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தினடிப்படையில் சடலத்தில் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் அறிக்கையில் அவருக்கு கொரோனாத் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 58 வயதுடைய அவர் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி கம்போடியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார்.

அவர் மூச்சுத்திணறல் (wheezing) நோயாளி. கடந்த மூன்று நாட்களாக அவருக்கு காய்ச்சல், தடிமன் உள்ளிட்டவை காணப்பட்டதால் இன்று அதிகாலை பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். எனினும் அவர் உயிரிழந்துள்ளார்.



Blogger இயக்குவது.