ராணுவ தளபாடங்களை தாக்க போகிறோம் அமெரிக்காவிற்கு ஈரான் வித்தியாசமான எச்சரிக்கை

iran america

முற்றும் அமெரிக்கா ஈரான் மோதல்… மூன்றாம் உலக போர் வெடிக்குமா ?
டெஹ்ரான்: அமெரிக்கா உலகில் பிற நாடுகளில் வைத்து இருக்கும் ராணுவ தளவாடங்களை அவர்களே எதிர்பார்க்காத வகையில் தாக்கி அழிக்க போகிறோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் கடந்த வாரம் டிரோன் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.




ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி ஈரானில் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவ தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பதிலடி

சுலைமானி கொல்லப்பட்டதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அதிபர் ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார். மிக மோசமான விளைவுகளை அமெரிக்கா சந்திக்க போகிறது. இதை நாங்கள் சும்மா விடப்போவதில்லை. இதற்கு மிக கடுமையான பதிலடி கொடுப்போம். நாங்கள் பழிக்கு பழி வாங்குவது நிச்சயம், என்று ஈரான் அதிபர் ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார்.



அமெரிக்கா தாக்குதல்

இந்த நிலையில் அமெரிக்கா மீது எப்படி தாக்குதல் நடத்த போகிறோம் என்பது குறித்து ஈரானின் முன்னாள் ராணுவ தளபதியும் தற்போதைய பாதுகாப்பு ஆலோசகருமான மேஜர் ஜெனரல் ஹொசைன் டெஹ்ஹான் தெரிவித்துள்ளார். அதில், அமெரிக்காவின் ராணுவ தளவாடங்களைத்தான் நாங்கள் தாங்க போகிறோம். உலகம் முழுக்க அமெரிக்காவிற்கு 800க்கும் மேற்பட்ட ராணுவ தளவாடம் இருக்கிறது.

அமெரிக்கா தாக்குதல் இந்த நிலையில் அமெரிக்கா மீது எப்படி தாக்குதல் நடத்த போகிறோம் என்பது குறித்து ஈரானின் முன்னாள் ராணுவ தளபதியும் தற்போதைய பாதுகாப்பு ஆலோசகருமான மேஜர் ஜெனரல் ஹொசைன் டெஹ்ஹான் தெரிவித்துள்ளார். அதில், அமெரிக்காவின் ராணுவ தளவாடங்களைத்தான் நாங்கள் தாங்க போகிறோம். உலகம் முழுக்க அமெரிக்காவிற்கு 800க்கும் மேற்பட்ட ராணுவ தளவாடம் இருக்கிறது.


எங்கு தாக்குதல்

அதேபோல் பல நாடுகளின் உங்களுக்கு ஃசேப் ஹவுஸ் எனப்படும் பாதுகாப்பு வீடுகள், தூதரகங்கள் உள்ளது. இதில் பல லட்சம் அமெரிக்கர்கள் இருக்கிறார்கள். இந்த நாடுகளில் பல நாடுகள் எங்கள் நட்பு நாடுகள். அவர்களிடம் நாங்கள் பேசுவோம்.

இதில் எங்காவது ஒரு இடத்தில் நாங்கள் தாக்குதல் நடத்துவோம். எங்கு தாக்குதல் நடத்துவோம் என்று உங்களால் கணிக்க முடியாது. உங்களால் எல்லா இடங்களையும் கண்காணிக்க முடியாது. அனைத்தையும் பாதுகாக்க முடியாது.


https://www.youtube.com/watch?v=Osx9zJpVuRk

எங்கள் போர் முறை வித்தியாசமாக இருக்கும் . அமெரிக்கர்களை கொல்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அது நடந்தே தீரும். ஈரானுக்கு உலகம் முழுக்க தொடர்பு இருக்கிறது. சீக்கிரம் நீங்கள் மிக மோசமான எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். ஈரான் எப்படி பழிவாங்கும் என்று காத்திருந்து பாருங்கள் என்று மேஜர் ஜெனரல் ஹொசைன் டெஹ்ஹான் தெரிவித்துள்ளார்.



Blogger இயக்குவது.