புதிய வசதிகளுடன் ஆப்பிள் ஏர்போட்ஸ் புரோ
ஆப்பிள் நிறுவனம் புதிய ஏர்போட்ஸ் ப்ரோ (AIRPODS PRO ) அக்டோபர் 28 ஆம் திகதி திங்கள் அன்று அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஏர்போட்ஸ் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகக் காணப்படுகிறது, இது செயலில் நோய்ஸ் கேன்ஸிலேசன் , வியர்வை மற்றும் வோட்டர் ரெஸிஸ்டண்ட் மற்றும் இன்-இயற் வடிவமைப்பின் சிறந்த கலவையை உங்களுக்கு வழங்குகிறது.
ஏர்போட்ஸ் புரோ விலை 249 அமெரிக்க டொலர் ஆகும். அமெரிக்காவில் புதிய ஏர்போட்ஸ் புரோ விற்பனை இன்று துவங்கியுள்ளது.
முன்னதாக ஆப்பிள் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் கொண்ட புதிய ஏர்போட்ஸ் இயர்போனினை அறிமுகம் செய்தது. அந்த வகையில் தற்சமயம் அறிமுகமாகி இருக்கும் ஏர்போட்ஸ் ப்ரோ மொடலும் வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் உடன் வழங்கப்படுகிறது.
புதிய ஏர்போட்ஸ் ப்ரோ ஐ.ஒ.எஸ். 13.2, ஐபேட் ஒ.எஸ். 13.2, வாட்ச் ஒ.எஸ். 6.1, டி.வி. ஒ.எஸ். 13.2, மேக் ஒ.எஸ். கேட்டலினா 10.15.1 அல்லது அதற்கு பின் வெளியான இயங்குதளங்களுடன் வேலை செய்யும் என ஆப்பிள் தெரிவித்தது.
இதனால் பயனர் இருக்கும் சூழலில் அதிகப்படியான சத்தத்தை குறைத்து, பயனர்களை அலாதியான இசையை அனுபவிக்க வழி செய்யும்.
இதில் உள்ள அடாப்டிவ் இ.கியூ. அம்சம் தானாக இயங்கி பயனர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் IPX4 தரச்சான்று பெற்ற வோட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
ஏர்போட்ஸ் ப்ரோ இயர்போன் ப்ளூடூத் 5.0 மற்றும் H1 சிப் மற்றும் 10 ஆடியோ கோர்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ஒவ்வொரு இயர்பட்களும் காதுகளில் சௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எக்டிவ் நோய்ஸ் கேன்சலேஷன் மோட் இரு மைக்ரோபோன்களை பயன்படுத்துகிறது.