டெலோவிலிருந்து சிவாஜிலிங்கம் வெளியேறினார்




தமிழீழ விடுதலை இயக்கமான டெலோவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தான் விலகுவதாக இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.





யாழ். திருமறைக் கலாமன்றத்தில்,  இன்று (03) முற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.





தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான டெலோ அமைப்பின் தவிசாளராக எம்.கே. சிவாஜிலிங்கம், பதவி வகித்து வந்திருந்தார். இந்நிலையில் அவர் இம்முறை ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார்.





இதனையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி அவருக்கெதிராக டெலோ அமைப்பு நடவடிக்கை எடுத்து வந்தது. இவ்வாறான நிலையிலேயே, தானாகவே கட்சியில் இருந்து விலகுவதாக சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.





இதற்கமைய கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தான் விலகுவதாக கட்சியின் செயலாளர் நாயகமான சட்டத்தரணி என்.சிறிகாந்தாவிடம் கடிதமொன்றையும் இன்று காலை சிவாஜிலிங்கம் நேரடியாக கையளித்துள்ளார்.






Blogger இயக்குவது.