பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 6ம் திகதி விசாரணை!


பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.





இதன்படி, குறித்த வழக்கு எதிர்வரும் 6ம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளதீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





2018பெப்ரவரி மாதம் 4ம் திகதி இலங்கையின் சுதந்திர தின வைபவம், பிரித்தானியஉயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.





அப்போது அந்த அலுவலகத்திற்கு வௌியில் புலம்பெயர்தமிழ் மக்களால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.





இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களைப் பார்த்து கழுத்தறுக்கப்படும் என்றவாறு சைகை காண்பித்தார் என பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராககுற்றம் சாட்டப்பட்டது.





அத்துடன் காணொளிகளும் வெளியாகியிருந்தன. இதனையடுத்துஅவருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கருத்துக்களையும் கண்டனங்களையும் வெளியிட்டிருந்தனர்.





இச்சம்பவத்தில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.





இந்நிலையில், குறித்த வழக்கு எதிர்வரும் 6ம் திகதிக்கு விசாரணைக்குஎடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் அந்நாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.


Leave a Comment

Blogger இயக்குவது.