பாகிஸ்தானுடன் மீண்டும் இந்தியா எப்போது கிரிக்கெட் விளையாகும்? கங்குலி விளக்கம்
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே மீண்டும் போட்டிகள் நடத்துவதற்கு இரண்டு நாடுகளின் அரசுகளும் அனுமதியளிக்க வேண்டியது அவசியம் என்று இந்திய கிரிக்கெட் வாரிய புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கங்குலி, வரும் 23ம் தேதி பொறுப்பேற்கவுள்ளார். அவரது தலைமையில் இந்திய அணி, பாகிஸ்தானில் கடந்த 2004ம் ஆண்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இந்நிலையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கங்குலியிடம், இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் எப்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், இந்திய பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும்தான் இதுகுறித்து முடிவெடுக்க முடியும் என்றார்.
பிரதமர் மோடியிடமும், இம்ரான் கானிடமும்தான் இக்கேள்வியை கேட்க வேண்டும் என்றும் கங்குலி பதிலளித்தார்.