ஐரோப்பிய ஒன்றியம் - பிரித்தானியா இடையில் பிரெக்சிற் உடன்பாடு


ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் பிரெக்சிற் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.





ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் உச்சிமாநாடு ஆரம்பமாவதற்கு முன்னதாக இந்த உடன்பாடு எட்டப்பட்ட விடயத்தை பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜேங் கிளுட் ஜங்கர் உறுதிப்படுத்தினர்.





நீண்ட காலமாக இழுபறி நீடித்த பிரெக்ஸிட் நகர்வில் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.





ஐரோப்பிய ஒன்றியத்தலைவர்களின் உச்சிமாநாடு நேற்று ஆரம்பமாவதற்கு முன்னர் பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் தொடர்ச்சியாக 3 நாட்கள் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.





இந்த உடன்பாட்டை ஐரோப்பிய நாடாளுமன்றமும் பிரித்தானிய நாடாளுமன்றமும் அங்கீகரித்தால் எதிர்வரும் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய வெளியேறுவதில் சிக்கல்கள் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





இதேபோல இந்தப் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் நியாயமான சீரான ஒப்பந்தம் என்றும் ஐரோப்பிய ஆணையக தலைவர் ஜேங் குளுட் ஜங்கர் தெரிவித்துள்ளார்.





இந்த நிலையில் நேற்று ஆரம்பித்த ஐரோப்பிய ஒன்றியத்தலைவர்களின் உச்சிமாநாட்டில் இந்த உடன்பாடு அங்கீகரிக்கப்படுனமெனவே எதிர்பார்க்கப்படுகிறது.


Blogger இயக்குவது.