ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க தலைவர் அல்-பக்தாதி கொல்லப்பட்டதாக தகவல்!


ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அல்-பக்தாதி அமெரிக்கப்படைகள் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





சிரியா மற்றும் ஈராக்கை மையமாக கொண்டு இயங்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் எனும் தீவிரவாத இயக்கம் தற்போது 90 சதவிகிதம் ஒடுக்கப்பட்டுவிட்டது. இதன் தலைவர் அல்-பக்தாதி ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஏற்கனவே பல முறை செய்திகள் வெளியானது.





ஆனால், அல்-பக்தாதி உயிருடன் இருப்பதாகவே அமெரிக்கா கூறி வந்தது. இந்த நிலையில், வடக்கு சிரியாவில் உள்ள இட்லிப் நகரைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளன. அமெரிக்க சிறப்புப் படையின் தாக்குதலில் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிகாரிகள் 3 பேர் தகவல் தெரிவித்துள்ளனர்.





இதனை ஈரானும் உறுதி படுத்தியுள்ளது. இந்த தகவலையும் உறுதிப்படுத்த முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் இதை சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.





”சற்று நேரத்துக்கு முன்னர் மிகப்பெரிய காரியம் ஒன்று நடந்துள்ளது” என பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், முழுமையான தகவல் கிடைத்தவுடன் அபுபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்ட விபரத்தை இன்னும் சில மணி நேரத்துக்குள் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.




Blogger இயக்குவது.