யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் பற்றிய புதிய தகவல்கள்

Jaffna Tamil Sri Lanka

நாளை மறுதினம் (17 ஆம் திகதி) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் பற்றிய புதிய தகவல்கள்.. 

இன்று புதிய விமானநிலையத்தில் முதல் விமானமாக இந்திய விமானமொன்று பரீட்சமார்த்தமாகத் தரையிறக்கப்பட்டது. இந்தியாவின் தொழில்நுட்ப அதிகாரிகளுடன் வெற்றிகரமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் (பலாலி) தரையிறங்கியது Air India Alliance விமானம். வருகை தந்த அதிகாரிகள் ஓடுபாதை பரிசோதனை மற்றும் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் விமான நிலையத்தின் தொழிநுட்ப மற்றும் இதர செயற்பாடுகள் குறித்து அறிந்து, சோதித்து வருகின்றனர். 17 ஆம் திகதி திறப்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகளும், இறுதிக்கட்ட ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன. 

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் 17 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டாலும், சென்னைக்கான விமான சேவைகள் எதிர்வரும் 27 ஆம்திகதி முதலே ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அதிகாரி தெரிவித்துள்ளார். 

படங்கள் & தகவல் : Nirujan Selvanayagam 

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் பற்றிய விரிவான தகவல்கள் அடங்கிய காணொளி : 

Leave a Comment

Blogger இயக்குவது.