இலங்கையர்கள் 80 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பு


இலங்கையர்கள் 80 ஆயிரம் பேருக்கு துறைமுக நகரத்தில் தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.





நாட்டை விட்டு செல்ல தயாராகும் இளைஞர்கள் 80000 பேருக்கு துறைமுக நகரத்தில் தொழில் வாய்ப்பு பெற்று கொடுக்கப்படும் என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.





அதற்காக துறைமுக நகரத்தில் பல்வேறு துறைகள் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.





அத்துடன் மேலும் பல அபிவிருத்தி திட்டங்கள் கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.





கொழும்பை இணைக்கும் நிலப்பராக கடலிற்குள் புதிய நகரம் ஒன்று உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Blogger இயக்குவது.