ஆதிவாசிகள் நோயில்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழ, தினம் இதை தான் சாப்பிடறாங்க!


ஆதிவாசிகள்



இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பழங்குடி இனத்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் உணவு முறையை முன்னிறுத்தி ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. காரணம், இவர்கள் உண்ணும் உணவுகளால் இதய நோய்கள், கொலஸ்ட்ரால் பிரச்சினை, புற்றுநோய்கள், கல்லீரல் பாதிப்பு போன்றவை தடுக்கப்படுகிறதாம்.





இந்த ஆராட்சியின் முடிவில் சில ஆச்சரியமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.





காலை உணவு
காலை நேரத்தில் பழங்களை உண்ணும் பழக்கம் இவர்களுக்கு உள்ளது. இதனால் தான் இன்றும் பளுவுடன் இருக்கிறார்கள். மேலும், கம்பு, வரகு போன்றவற்றை அடை போல செய்து உண்ணுவார்கள்.





கிழங்கு வகை
பழங்குடி இனத்தவர்களுக்கும் கிழங்கு வகைகளுக்கும் என்றுமே ஒரு தொடர்பு உள்ளது. பழங்களை அதிக அளவில் உண்ணுவது போலவே இவர்கள் கிழங்கு வகை உணவுகளை விரும்பி உண்ணுவார்கள். சேனை கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு போன்றவற்றை பழங்குடி மக்கள் உணவில் முக்கியமாக சேர்த்து கொள்வார்கள்.





கால மாற்றம்
நாம் உண்ணுவதை போலவே காலத்திற்கேற்ற உணவு முறையும் இவர்களுக்கு உண்டு. குளிர் காலத்தில் வேறுவித உணவுகள், வெயில் காலத்தில் வேறு வித உணவுகளை இவர்கள் உண்பார்கள். அதிகமாக வெயில் காலத்தில் தானிய வகைகள், காளான் போன்ற உணவுகளை உண்ணுவார்கள்.





மாமிச உணவுகள்
பழங்குடி மக்கள் என்றதும் அவர்கள் மனிதர்கள், காட்டு விலங்குகளை அடித்து தின்பார்கள் என்கிற கட்டுக்கதை பரப்பப்பட்டுள்ளது. ஆனால், இது உண்மை இல்லை.





அந்த அளவிற்கு இவர்கள் பயங்கர உணவுங்களை சாப்பிடுவதில்லை. மாறாக மீன், நண்டு, நத்தை, ஆடு, மாடு, கோழி போன்ற அசைவ உணவுகளை தான் சாப்பிடுகிறார்கள்.





தேன்
அதிக மருத்துவ தன்மை கொண்ட நீண்ட நாட்கள் கெடாத உணவுகளில் தேன் தான் முதலிடத்தில் உள்ளது. பழங்குடி மக்கள் பெரும்பாலும் தேனை உணவில் சேர்த்து உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். எவ் வகை உணவாக இருந்தாலும் அதில் தேன் இடம்பெறுவது சகஜமே. இவற்றில் உள்ள மருத்துவ குணம் தான் நீண்ட ஆயுளை பெற மூல காரணமாக உள்ளதாம்.





குளிர் காலங்களில்
குளிர் காலத்தில் சாப்பிட கூடிய உணவை வேகவைத்து சூடாகவே இந்த குளிர் காலங்களில் உண்ணுவார்கள். சேனை கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவரை வேக வைத்து சாப்பிடுவார்கள்.





கீரைகள்
உணவில் கீரை வகைகளில் ஏதேனும் ஒன்றாவது இடம் பெற்றிருக்கும். இவர்களின் உற்பத்தி முறையும், உணவு முறையும் இயற்கையை என்றுமே சார்ந்திருக்கும். இதுவும் தான் இவர்கள் அதிக ஆயுளுடன் வாழ்வதற்கு முக்கிய காரணம்.





மசாலாக்கள்
உண்ணும் உணவில் பலவித மூலிகை தன்மை மிக்க மசாலாக்களை சேர்த்து உண்ணுவார்கள். இது அவர்களை அதிக ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும். மஞ்சள், அதிமதுரம், கிராம்பு, பட்டை, இலவங்கம், கடுக்காய் போன்ற பல மூலிகைகள் அவர்களின் உணவிலும் இடம் பெறும்.இதனாலேயே இவர்களது உடல் எப்போதும் நோய் நொடி இல்லாமல் உள்ளது.


Blogger இயக்குவது.