ரி-20 கிரிக்கெட்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு
ரி-20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் வீரர்கள், பந்து வீச்சாளர்கள் மற்றும் சகலதுறை வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
இதில் துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் 844 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அவுஸ்ரேலியாவின் ஆரோன் பின்ஞ் 839 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். இந்தியாவின் லோகேஷ் ராகுல் 812 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார்.
இவர்களையடுத்து, நியூசிலாந்தின் கொலின் முன்ரோ 801 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் அணியின் பகார் சமான் 793 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளார்.
நியூசிலாந்தின் மார்டின் கப்டில் ஆறாவது இடத்திலும், அவுஸ்ரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் ஏழாவது இடத்திலும், இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் எட்டாவது இடத்திலும், இங்கிலாந்தின் ஜேஸன் ரோய் ஒன்பதாவது இடத்திலும், இந்தியாவின் ரோஹித் சர்மா பத்தாவது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 793 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் சதாப் கான் 757 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்தின் இஸ் சோதி 757 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவின் யுஸ்வேந்திர சஹால் 685 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், இங்கிலாந்தின் அடில் ராஷித் 676 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
நியூசிலாந்தின் மிட்செல் சான்ட்னர் ஆறாவது இடத்திலும், விண்டிஸ் அணியின் சமுவேல் பத்ரி ஏழாவது இடத்திலும், தென்னாபிரிக்காவின் இம்ரான் தஹீர் எட்டாவது இடத்திலும், அவுஸ்ரேலியாவின் பில்லி ஸ்டேன்லேக் ஒன்பதாவது இடத்திலும், பாகிஸ்தானின் இமாட் வாசிம் பத்தாவது இடத்திலும் உள்ளனர்.
சகலதுறை வீரர்கள் தரவரிசையில் அவுஸ்ரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் 345 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தானின் மொஹமட் நபி 313 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பங்களாதேஷின் சகிப் ஹல் ஹசன் 310 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இதேபோல அணிகளின் தரவரிசைப் பட்டியலில் 136 புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதலிடத்திலும், 124 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாடமிடத்திலும், 118 புள்ளிகளுடன் அவுஸ்ரேலியா மூன்றாமிடத்திலும் உள்ளன.