பட்டேல் ராட்சத சிலை: 10 முக்கிய அம்சங்கள்(உலகின் உயரமான சிலை)
State of unity அதாவது 'ஒற்றுமையின் சிலை' என்று அழைக்கப்படும் உலகின் உயரமான சிலை குஜராத்தில் நர்மதா அணைக்கு அருகில் இன்று (புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
[gallery columns="1" size="full" ids="1539,1540,1541,1542,1543,1544,1545,1546,1547,1548"]
உங்களின் உயரம் ஆறு அடி என்றால் இந்த சிலை உங்களைவிட நூறு மடங்கு உயரமானது. அதாவது, இந்த சிலையின் உயரம் 182 மீட்டர். இது அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைவிட இரு மடங்கு உயரமானது.
தமிழ்நாட்டில் இருக்கின்ற திருவள்ளுவர் சிலையைவிட ஏறத்தாழ 5 மடங்கு உயரமானது. திருவள்ளுவர் சிலையின் உயரம் 41 மீட்டர். இந்த சிலையின் மொத்த எடை சுமார் 67 ஆயிரம் மெட்ரிக் டன்கள்.
சுதந்திரத்திற்கு பின் சண்டையிட்டுக் கொண்டிருந்த மாகாணங்களை ஒன்றிணைத்த சர்தார் பட்டேலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கட்டப்பட்ட இந்த சிலையை, பட்டேலின் பிறந்த தினமான இன்று பிரதமர் மோதி திறந்து வைத்தார்.
வரவேற்பு பலகையில் இந்த Statue of Unity என்பது தமிழில் "ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி"ன்னு தவறாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இருந்தது. இது சமூக வலைதலங்களில் பலத்த கிண்டலுக்கும், கண்டனத்திற்கும் உள்ளானது.
2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் 42 மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த செலவு சுமார் 3000 கோடி இந்திய ரூபாய் ஆகும்.
நிலநடுக்கம் ஏற்பட்டாலும் இந்த சிலைக்கு எந்த சேதமும் ஏற்பாடமால் பாதுகாப்பாக இருக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த சிலை கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையானது ஒரு நொடிக்கு 60 மீட்டர் அளவுக்கு வீசும் காற்றின் எடையினை தாங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட விதம் ஆர்வமூட்டக்கூடியதாகவும் முக்கியமாக சொல்ல வேண்டுமெனில் உலகம் முழுவதுள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் திட்ட மேலாண்மைக்கான ஆய்வுக்கும் , திட்டமிடுதல், வடிவமைப்பு போன்றவற்றுக்கான ஆய்வுக்கும் பேசப்படும்.
இந்த சிலை கட்டுமானத்தால் அங்குள்ள பல்லுயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர். சிலையின் கட்டுமானாத்திற்கும், அதன் பிரம்மாண்ட திறப்பு விழாவிற்கும் உள்ளூர் பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பலர் கைதும் செய்யப்பட்டுள்ளார்கள். திட்டத்துக்காக செலவழிக்கப்பட்ட 3000 கோடி ரூபாய் மிக அதிகம், அதை எங்க வளர்ச்சிக்காக பயன்படுத்தி இருக்கலாம் என்பது அவர்கள் வாதம்.
ஆனால், இந்த சிலை மாவட்ட பொருளாதாரத்தை உயர்த்தும் என்று அரசாங்கம் நம்புகிறது.
ஏனெனில் ஆண்டுக்கு 2.5 மில்லியன் (25 லட்சம்) பார்வையாளர்கள் அங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"இதனால் உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதோடு, அப்பகுதியில் சுற்றுலாவாசிகளின் வருகையும் அதிகரிக்கும்" என்கின்றனர் அரசு அதிகாரிகள்.
செல்ஃபி புகைப்படம் எடுப்பதற்காக இந்த இடத்தின் அருகில் பல 'செல்ஃபி பாயிண்ட்' அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த சிலை திறப்பு விழாவில், “பட்டேல் மட்டும் இல்லை என்றால், கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு ரயில் விட்டுருக்க முடியாது” என்று மோதி பேசினார்.