மூன்று முட்டாள்களும் தயார்!

எந்திரன் படத்தின் இறுதி கட்ட வேலைகளில் பிஸியாக இருக்கும் இயக்குனர் ஷங்கர் அடுத்து சித்தார்த்தை தமிழ்தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இயக்குவதாக இருந்த நிலையில்தான்

3 இடியட்ஸ் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கை இயக்க வருமாறு இப்படத்தை தயாரிக்க இருக்கும் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் அழைப்பு விடுத்தது.

அழைப்பை ஏற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஷங்கர் முதலில் விஜயை தனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து நாம் சேர்ந்து பண்ணலாம் என்று உறுதி செய்திருக்கிறார்.

இதுவரை ரீமேக் செய்யாத ஷங்கர் முதன்முறையாக ரீமேக் செய்கிறார். அமீர்கான் ஏற்ற கதாபாத்திரத்தில் விஜய் நடிக்க ஒப்புகொண்ட பின்னர், ஏற்கனவே நடிக்க ஒப்புகொண்டிருந்த ஜீவா வேண்டாம் என்று சொல்லி விட்டாராம் ஷங்கர்.

இப்போது ஜீவாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த கேரக்டரில் எஸ்.டி ஆர் என்கிற சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஷங்கர் சிம்புவுக்கு போனில் சொன்னதும் சிம்பு மறு பேச்சு பேசவில்லை என்கிறார்கள் சிம்பு வட்டாரத்தில்.

மூன்றாவது முட்டாள்? மாதவன் ! ஆமாம்! மாதவன் ஹிந்தியில் ஏற்று நடித்த அதே பாத்திரத்தை தமிழ் தெலுங்கில் ஏற்று நடிக்கிறார்.

தெலுங்கில் விஜய் இடத்தில் மகேஷ் பாபுவும், சிம்பு ஏற்க்கும் பாத்திரத்துக்கு மனோஜ் மஞ்சுவும் பேசப்பட்டு வருவதாக தகவல் கிடைக்கிறது.

பிரமாண்டத்திற்கு பெயர்போன ஷங்கருடான விஜய் கூட்டணி எந்திரன் அளவுக்கு எதிர்பார்ப்பை உருவாக்கும் என்று நம்பலாம்.

இந்த படத்துக்கு முதலில் ஏ.ஆர்.ரஹ்மானை அனுகியிருந்த நிலையில் இப்போது ரஹ்மான் வேல்டு டூரை மனதில் கொண்டு யுவன் ஷங்கர் ராஜாவை அழைத்திருக்கிறார் ஷங்கர்.

மூன்று முட்டாள்கள் கதையை தமிழுக்கு ஏற்ப மாற்றி விடுவது என்று முடிவு செய்திருகிறாராம் ஷங்கர்!
பிந்திக் கிடைத்த தகவல்:

கடைசியாக கிடைத்துள்ள தகவலின்படி மூன்று முட்டாள்கள் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு ரீமேக் வெர்ஷன்களில் இருந்தும் மாதவன் வெளியேறி விட்டதாகவும், விஜய்க்கு கீழே நடிக்க மாதவன் விரும்பாததே இதற்கு காரணம் என்றும் தகவல் கிடைகிறது. இந்த ரீமேக்கில் நடிக்க வேண்டாம் என மாதவனை மணிரத்னம் வலியுறுத்தியதாகவும், இதனால் மாதவன் இடத்துக்கு பொறுத்தமான நடிகரைத் தேடி வருவதாகவும் சில தகவல்கள் தெரிவிகின்றன.
Blogger இயக்குவது.