அவன் இவனில் அரவாணியாக நடிக்கும் விஷால்
நான் கடவுள் படத்தை தொடர்ந்து டைரக்டர் பாலா இயக்கி வரும் அவன் இவன் படத்தில் நடிகர் விஷால் அரவாணி வேடத்தில் நடிக்கிறார் என்ற புதிய தகவல் வெளியாகி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ஷன் ஹீரோவாக தமிழ்சினிமாவை வலம் வந்த விஷால் அரவாணி வேடத்தில் நடிக்க எப்படி சம்மதித்தார்? என்ற பேச்சும் எழுந்துள்ளது. படத்தில் ஆர்யாவும் நாயகனாக நடிக்கிறார். அவன் இவன் கதை பற்றி எந்த தகவலும் வெளியாகாத நிலையில், பாலா அளித்த பேட்டியொன்றில், விஷால் அவனாகவும், ஆர்யா இவனாகவும் நடிக்கிறார், என்ற ஒரேயொரு தகவலை மட்டும் தெரிவித்திருந்தார். தமிழ் சினிமாவில் அவன் என்று அரவணி கேரக்டரை சொல்வார்கள். அதன்படி பார்த்தால் படத்தில் விஷால் அரவாணியாக நடிப்பது உறுதியாகி விட்டது.
பெரும்பாலான ஹீரோக்கள் அஞ்சுகிற கேரக்டர்தான் இது. தமிழ் நாயகர்களில் பிரகாஷ் ராஜ் மட்டும் அப்பு படத்தில் அவாணியாக நடித்திருந்தார். ஆனால் அவன் இவனில் பிரகாஷ் ராஜ் அளவுக்கு இல்லையென்றாலும், சற்றே பெண்மை சாயலுடன் வளர்கிற ஒரு ஆணாக நடித்திருக்கிறாராம் விஷால். திருநங்கைகளை சகட்டுமேனிக்கு குதறி எடுக்கும் படங்களைதான் இப்போதும் எடுத்துக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. அவர்களின் உணர்வுகளையும், போராட்டங்களையும் உணர்ச்சிபூர்வமாக சொல்கிற படம் எதுவும் இதுவரைக்கும் வந்ததாக தெரியவில்லை.
தெனாவட்டு படத்தில் திருநங்கைகளை மரியாதைக்குரிய கேரக்டராக காட்டியிருந்தார்கள்.
இந்நிலையில்தான் வித்தியாச விரும்பியான பாலா திருநங்கைகள் கதையை கையில் எடுத்திருக்கிறார். ஒரு குடும்பத்தில் பெண்களின் குணாதிசயங்கள் மற்றும் சாயலுடன் பிறக்கும் ஒரு ஆண்மகன் சந்திக்கிற பிரச்சனைகளையும் அவன் இவன் படத்தில் லேசாக தொட்டிருக்கிறாராம். இந்த கேரக்டரில் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே நடிகர் விஷால் வெளியிடங்களுக்கு செல்லாமலும், தனது கெட்டப்பை வெளிக்காட்டாமலும் இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.