நடிகை அசின் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி

பிரபல மலையாள டைரக்டர் சித்திக், இந்த படத்தை டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு, காரைக்குடியில் நடைபெற்று வருகிறது.
நேற்று காலை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன், நடிகை அசின் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த கேரவனில் அமர்ந்து மேக்கப் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, கேரவனில் பொருத்தப்பட்டிருந்த ஏர்கண்டிஷனில் இருந்து கேஸ் கசிந்தது.
இதனால் அசினுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தபின், அசினுக்கு மயக்கம் தெளிந்தது.
அசின் மயங்கி விழுந்ததால், படப்பிடிப்பு தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அசின் நலமாக இருக்கிறார் என்ற தகவல் கிடைத்த பிறகே படப்பிடிப்பு தொடர்ந்தது. அசின் சம்பந்தப்படாத காட்சிகள் படமாக்கப்பட்டன.