மீன்ரின் கட்லட் செய்யலாம் வாங்க - Fish cutlets

மீன்ரின் கட்லட்


தேவையான பொருட்கள்:
200 கிராம் பதப்படுத்திய மீன்- ரின் மீன் அல்லது மஞ்சள் உப்புச் சேர்த்து அவித்த அறுக்குளா அல்லது சூரை மீன்
200 கிராம் அவித்த உருளைக்கிழங்கு
1 பெரிய வெங்காயம்
4 பச்சை மிளகாய்
1/2 தேகரண்டி மிளகு தூள்
1/2 தேக தனிச் செத்தல் தூள்
1/4 தேக மஞ்சள் தூள்
ஒரு சிறு துண்டு இஞ்சி
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு பாண் தூள்
3 மேசைகரண்டி அவிக்காத கோதுமை மா
எண்ணை பொரிப்பதற்கு

செய்முறை:
ஒரு சட்டியை அடுப்பில் வைத்துச் சூடாக்கி 1மேசைக்கரண்டி எண்ணை விட்டு அதில் 1/2 சிறிதாக வெட்டிய வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி அதனுடன் செத்தல் தூள், மஞ்சள் தூள் இவற்றைச் சேர்த்துக் கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும். 

பின்பு இதனை ரின் மீன், அவித்த உருளைக்கிழங்கு, மீதமுள்ள வெட்டிய பாதி வெங்காயம், உப்பு, இடித்த சிறிய துண்டு இஞ்சி, மிளகு தூள் இவற்றுடன் சேர்த்துக் குழைத்து எடுக்கவும்.

3 மேசைக்கரண்டி கோதுமை மாவை சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். உருட்டி வைத்துள்ள கட்லட் உருண்டைகளை மாக்கரைசலில் தோய்த்து பாண் தூளை எல்லாப் பக்கமும் பிரட்டி கொதிக்கும் எண்ணையில் பொரித்து எடுக்கவும்.

செய்முறை காணொளியாக:
Blogger இயக்குவது.