31 ஆம் இன்று தான் ஆசியாவின் அரிய நூலகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம்.

Jaffna Library burn


முன்னிரவில் ஆயுதங்களோடு உள்ளே புகுந்தார்கள். காவலாளி அடித்து விரட்டப்பட்டார். கதவுகள் உடைக்கப்பட்டன. 97,000அரிதான நூல்களும் ஓலைச்சுவடிகளும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த ஒட்டு மொத்த அறிவு பொக்கிஷத்தையும் பெட்ரோல் ஊற்றி எரித்தனர். நூலகம் எரிவதை மொட்டை மாடியில் நின்று பார்த்த பன்மொழிப்புலவர் தாவீது அடிகள் மாரடைப்பு ஏற்பட்டு செத்துப் போனார். 

அந்தச் சாம்பல் குவியலில் எரியாத நூல்கள் இருக்குமோ என நூலக உதவியாளர்கள் தேடித் திரிந்தனர். கண்ணீர் மட்டுமே மிச்சம். பின்னர் 'ஒரு லட்சம் புத்தகங்கள்' என்று விகடனில் சிறுகதை எழுதினார் சுஜாதா. 'எரியும் நினைவுகள்' என்ற ஆவணப்படத்தை எடுத்தார் அண்ணன் சோமிதரன். VS துரைராசா விரிவான ஆவண நூலை எழுதினார். 

ஈழத்தமிழரின் ஈடில்லா உழைப்பால் நூலகம் மீண்டும் கட்டப்பட்டது. எங்கே தங்க விரும்புகிறீர்கள் என கேட்டபோது எந்த இடம் நூலகத்திற்கு அருகில் உள்ளது? என்றார் டாக்டர் அம்பேத்கர். ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படும் என்றார் விவேகானந்தர். வேறு சலுகைகள் வேண்டாம், சிறையில் புத்தகம் வாசிக்க அனுமதியுங்கள் என்றார் நெல்சன் மண்டேலா. தம்பி தங்கைகளே.. தயவுசெய்து வாசியுங்கள். கிசுகிசு, கிளுகிளுப்புகளைத் தாண்டி அரிய பல பொக்கிஷங்கள் நீ புரட்ட புத்தகமாய் காத்திருக்கின்றன. குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு பக்கமாவது வாசியுங்கள். நண்பர்களையும் வாசிக்கத் தூண்டுங்கள். 

மே 31.ஆம் இன்று தான் ஆசியாவின் அரிய நூலகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம்.
Blogger இயக்குவது.