மில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee
மில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்:
1 ரின் பால் 400கிராம்
250 கிராம் சீனி
50 கிராம் பட்டர்
50 கிராம் கஜூ
1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர்
1 தேகரண்டி வனிலா எசன்ஸ் - அல்லது ஏலக்காய் தூள் சிறிது
மில்க் ரொபி செய்முறை
ரின் மில்க்கையும் தண்ணீரையும் சேர்த்துக் காய்ச்சிக் கொள்ளுங்கள். இப்பொழுது சர்க்கரை(சீனி) சேர்த்து கிளறிக் கொண்டிருங்கள். என்ன பதார்த்தம் இறுகி வருகின்றதா? அப்படியானால் வனிலா, கஜூ சேர்த்து நன்றாகக் கலந்து விடுங்கள். இதனை வெண்ணை தடவிய தட்டில் போட்டு நன்றாகப் பரவி விடுங்கள். ஆறிய பின்னர் உங்கள் விருப்பமான வடிவத்தில் வெட்டிக் கொள்ளுங்கள்.