ஊபர் அனுமதி ரத்து இன்று நள்ளிரவு முதல் லண்டனில் முடிவுக்கு வரும் ஊபர் சேவைகள்!


ஊபர் (UBER) என்ற வாடகை வாகன சேவையின் அனுமதியை இன்று நள்ளிரவு முதல் தாம் நிறுத்தி உள்ளதாக லன்டன் போக்குவரத்து அமைப்பு (Transport for London- TFL) அறிவித்துள்ளது.





பாதுகாப்பு மீறல்கள் தொடர்பாக கிடைப்பபெற்ற முறைப்பாடுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.’ஊபர்’ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான சேவையை வழங்கும் என்ற நம்பிக்கையை தாம் இழந்துவிட்டதாலேயே ஊபர் சேவைக்கு அனுமதியளிக்க மறுத்துள்ளதாக TFL தெரிவித்துள்ளது.







‘ஊபர்’ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத ஓட்டுனர்கள் சேவையில் ஈடுபடும் வகையில் பாதுகாப்பற்ற நடைமுறை காணப்படுவதாகவும், சுமார் 14,000 பதிவுசெய்யப்படாத ஓட்டுனர்கள், வாகனங்கள் சேவையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் TFL தெரிவிக்கின்றது.கடந்த இரண்டு வருட காலப்பகுதியில், ஊபர் நிறுவனத்திற்கான அனுமதியை லன்டன் போக்குவரத்து அமைப்பு இரண்டு தடவைகள் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.அதேவேளை, லன்டனில் மத்திரம் 3.5 மில்லியன் வாடிக்கையாளர்கள் தமக்கு இருப்பதாக கூறும் ‘ஊபர்’ நிறுவனம், தமது சேவை தொடரும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ள அதேவேளை, வாடிக்கையாளர்கள் ‘ஊபர் சேவை’ பற்றிய தமது அனுபவங்களை லன்டன் போக்குவரத்து அமைப்புக்கு தெரிவிக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.


Blogger இயக்குவது.