150 பயணிகளுடன் நடுவானில் தடுமாறிய இந்திய விமானத்திற்கு உதவிய பாகிஸ்தான்!


இந்திய விமானம் ஒன்று 150 பயணிகளுடன் ஜெய்பூரில் இருந்து பாகிஸ்தான் வழியாக மஸ்கட் சென்று கொண்டிருந்தது. அப்போது மின்னல்கள் மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானம் தடுமாறியது. 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென 34,000 ஆயிரம் அடி தூரத்திற்கு கீழே இறங்கியது. அப்போது “மேடே” எனப்படும் அவசர செய்தியை அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு பைலட் அனுப்பினார்.





நிலைமையை புரிந்து கொண்ட பாகிஸ்தான் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் இந்திய விமானத்தை உரிய நேரத்தில் வழி நடத்தி ஆபத்தில் இருந்து பத்திரமாக மீட்டார். மேலும் பாகிஸ்தான் வான்வெளியில் பயணத்தின் எஞ்சிய பகுதிக்கு அருகில் விமானம் செல்ல உதவினார்.





தெற்கு சிந்து மாகாணத்தின் சோர் பகுதி அருகே இந்த விமானம் அசாதாரண வானிலையை எதிர்க்கொண்டதாக விமானப்போக்குவரத்து ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.





பாகிஸ்தான் உதவிய ஜெய்ப்பூர்- மஸ்கட் விமானத்தின் பெயர் வெளியிடப்படவில்லை. ஒரு மாதத்திற்கு மேலாக காஷ்மீர் விவகாரத்தை காரணம் காட்டி இந்திய விமானங்கள் மற்றும் பிரதமர் மோடி விமானங்கள் கூட பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Blogger இயக்குவது.