தாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம் – சுவிஸ் ஆய்வில் பகீர் தகவல்!



சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், தாடி வைத்த ஆண்களைக் காட்டிலும் நாய்கள் சுத்தமானவை என தெரிய வந்துள்ளது.

சுவிஸில் மனிதர்களுக்கும், நாய்களுக்கும் ஒரே எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின் பயன்படுத்தப்படுவது வழக்கம். அப்படி பயன்படுத்தப்படும்போது நாய்களில் இருந்து மனிதர்களுக்கு ஏதேனும் தொற்று ஏற்படுகின்றனவா என கண்டறிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

இந்த ஆய்வு ஹிர்ஸ்லாண்டன் மருத்துவமனையில் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதற்காக 18 ஆண்களிடம் இருந்து அவர்களது தாடி மாதிரிகள் பெறப்பட்டன. அதேபோல் 30 நாய்களின் தோல் மாதிரிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

ஆய்வின் முடிவில், ஆண்களின் தாடியில் இருப்பதை விட நாய்களின் தோலில் குறைவான பாக்டீரியா தொற்று இருப்பது தெரியவந்தது. இதன்மூலம் ஆண்கள் தங்களது தாடியை சரியாக பராமரிப்பதில்லை என்று தெரிகிறது.

மேலும், நாய்களின் தோலில் சராசரியாக இடம்பெறும் பாக்டீரியாக்களை விட, ஆண்களின் தாடியில் சர்வ சாதாரணமாக பாக்டீரியாக்கள் கணக்கில் அடங்காத அளவில் வளரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Blogger இயக்குவது.