விஜயையுடன் நடிக்க விரும்பாத சிம்பு ,கோடம்பாக்கத்தில் பரபரப்பு !
தமிழ் சினிமாவில் சிம்புவின் மீதுள்ள அபிப்ராயமானது இரண்டு வகையாக பிரிக்கலாம் அது, 'விவாமு' 'விவாபி' அதாவது 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்திற்கு முன், 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்திற்கு பின். இப்படி 'விவாமு' வில் சிம்பு (எஸ்டிஆர்) என்றாலே வம்பு என்ற நிலைதான் இருந்தது.
ஆனால் 'விவாபி' வில் சிம்புவின் மீது நல்ல அபிப்ராயம் வந்தது. அந்த நல்ல அபிப்ராயத்தை அவரே கெடுத்துக்கொண்டிருக்கிறார். '3 இடியட்ஸ்' இந்திப் படத்தை தமிழில் ரீமெக் செய்யப்போகிறார்கள் என்பது, அதை ஷங்கர் இயக்க, விஜய் அமீர்கான் வேடத்திலும், அவருடன் சிம்பு நடிப்பது என்பதும் அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு சிம்பு பேட்டியளித்துள்ளார்.
இந்த பேட்டியின் மூலம் கோடம்பாக்கத்தையே கதிகலங்கை வைத்திருக்கிறார். '3 இடியட்ஸ்' படத்தில் விஜயுடன் நீங்கள் நடிக்கிறீர்களா? என்று வார இதழ் நிறுபர் கேட்ட கேள்விக்கு சிம்பு அளித்த பதில் "விஜய் சார் பெரிய நடிகர். அவருடன் நடிக்கிறது நல்ல விஷயம். ஆனால் எனக்கு அஜித் ரசிகர்கள் அதிகம்.
ஆகவே விஜயுடன் நடிப்பது மூலம் அஜீத் ரசிகர்களை சங்கடப்படுத்திடக் கூடாது. அதனால யோசிச்சுதான் முடிவு எடுக்கணும்" என்றார். சிம்புவின் இந்த பதில், நடிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. "சிம்பு இப்படி பேசியது அழகல்ல" என்று நடிகர் சங்க செயலாளர் கூறியுள்ளாராம்.
இந்த நிலையில் விஜயின் தரப்பில் இருந்து அவருடைய தந்தை, அவரது செய்தித் தொடர்பாளர் ஆகியோர் மற்றும் முன்னணி பத்திரிகையாளர்கள் போன்றோர் சிம்புவைத் தொடர்புகொள்ள முயற்சித்தும் தொடர்புகொள்ள முடியவில்லையாம்.
இதற்கிடையில் சிம்புவின் இந்தப் பதிலால், தமிழில் 3 இடியட்ஸ்' படத்தை தயாரிக்கும் ஜெமினி நிறுவனமும், இயக்குநர் ஷங்கரும் இப்படத்தில் இருந்து சிம்புவை நீக்க முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு என்ற பெயரை எஸ்டிஆர் என்று மாற்றியவுடன் இப்படி ஒரு பிரச்சனையா? சரியா போச்சு..