மனிதனின் கால் படாத இடத்தில் உருவாகிய எந்திரன் படப் பாடல்."காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை"

எந்திரன் இசைப்பாடல் ஜூலை 31ந் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் இசைவிழாவினை அடுத்து உலகமெங்கும் இசைஉலா வரவிருக்கிறது.எந்திரன் படத்திற்கு 3பாடல்கள் கவிஞர் வைரமுத்து எழுதி இருக்கிறார்.இதில்,விஞ்ஞானியான ரஜினிகாந்தும், ஐஸ்வர்யாவும் பாடும் காதல் பாடலான “காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை” என்னும் பாடலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.எப்போதுமே, பத்து பதினைந்து முறைக்கு பிறகே ஏற்றுக்கொள்ளும் ஷங்கர், வைரமுத்து எழுதித் தந்த முதல் பல்லவியினையே தேர்தெடுத்தாராம்.‘உப்புக்கருவாடு ஊறவச்சச் சோறு’ பாட்டுக்கு அடுத்து ஒரே பல்லவியில் ஷங்கர் திருப்தி அடைந்தப் பாடல் பல்லவி “காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை” என்பதாம்.இந்தப்பாடலின் படக்காட்சிக்காக, ஆப்பிரிக்க தேசத்தில் மனிதர்களின் கால் தடமே பதியாத இடத்தில் எந்திரன் படக்குழு ஆட்டம் போட்டுள்ளது. எந்திரனின் படப்பிடிப்புக்கே இதுதான் பிள்ளையார் சுழியாம்.இத்தகு சுவாரசியங்கள் மிகுந்த பாடலுக்கான சூழல் கூட புதுமையானதே…ஆய்வுக்கூடம் ஒன்றே கதி என்றிருக்கும் விஞ்ஞானியின்(ரஜினி) மனதில் வேதியல் மாற்றம் நிகழ்த்துகிறாள் காதலி(ஐஸ்வர்யா).இந்தக் காதலை சதி சொல்லிப்பாட எழுந்தது தான் கவிஞரின் கவி வரி…

பாடல் வரிகள்…
பல்லவி
------------------------------------------------------------------------------------------------

ரஜினி : காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை ?
நியூட்ரான் எலக்ட்ரான்-உன்
நீலக் கண்ணில் மொத்தம் எத்தனை ?

உன்னை நினைத்தால் திசுக்கள் தோறும் ஆசைச் சிந்தனை ஹய்யோ!

அன்பே! அன்பே!
ஒரே வினா ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா ?

நீ வந்து சேர்ந்த என் வரவு
எந்தன் வானம் முழுவதும் நிலவு

நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா ?

ஐஸ்வர்யா : நீ
முற்றும் அறிவியல் பித்தன்-ஆனால்
முத்தம் கேட்பதில் ஜித்தன்

உன்னால்
தீம் தோம் தோம் மனதில் சத்தம்
தேன் தேன் தேன் இதழில் யுத்தம்
ரோஜாப் பூவில் ரத்தம்

ரஜினி : பட்டுரோஜா பால்ரோஜா
பனிரோஜா நீதான் அன்பே!
கிட்ட வந்தால் வாசத்தால்
நுரையீரல் திமிறும் பெண்ணே!

காளிதாசன் இங்கிலீஷில் செய்த கவி நீ தான் கண்ணே
அழகின் மொத்தம் நீயா ?

சரணம்-1
------------------------------------------------------------------------------------------------
ரஜினி : பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
கால்களைக் கொண்டுதான் ருசியறியும்
காதல்கொள்ளும் மனிதப் பூச்சி
கண்களைக் கொண்டுதான் ருசியறியும்

ஐஸ் : ஓடுகிற தண்ணியில் தண்ணியில்
ஆக்சிஜன் மிக அதிகம்
பாடுகிற மனசுக்குள் மனசுக்குள்
ஆசைகள் மிக அதிகம்

ரஜினி : வாழ்க்கையே வா!
காதலின் சிப்பியில்
நீயும் நானும் முத்தாய்ப் போவோம் வா! வா!

ஐஸ் : காதல்காரா!
நேசம் வளர்க்க ஒரு நேரம் ஒதுக்கு-எந்தன்
நெஞ்சம் வீங்கிவிட்டதே!

ரஜினி : காதல்காரி!
எந்தன் பிழைப்பில்
உந்தன் இடையைப்போல
நேரம் சுறுங்கிவிட்டதே!

சரணம் -2

------------------------------------------------------------------------------------------------


ரஜினி : வியாழன் என்னும் கிரகத்துக்கு
ஒன்பது நிலவு ஒளிருதடி ;
பூமிக்குத்தான் இரு நிலவு
பூவை உன் பிறப்பால் வாய்த்ததடி!

ஐஸ் : காற்றுவெளி கோள்களை ஆய்ந்திட
மூளையைப் பயன்படுத்து
காதலியின் அகம்புறம் அறிந்திட
இதயத்தைப் பயன்படுத்து

ரஜினி : சிற்பமே வா!
கஞ்சன் கண்ட தங்கக் காசாய்
இதயத்துள் உன்னை வைப்பேன் வா!

ஐஸ் : மூளைக்காரா!
முத்தம் வழங்கும்போது
வோல்டேஜ் கணக்கெடுத்தால்
முத்தம் இனிப்பதில்லையே!

ரஜினி : மோகக்காரி!
முத்தம் கொடுக்கும்போதே
மூளை உருகிப்போகும்
வோல்டேஜ் நினைப்பில் இல்லையே!
Blogger இயக்குவது.