கார்த்தி பிறந்த நாளை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் முதியோர் இல்லத்திலும் கொண்டாடினார்.
நடிகர் கார்த்தி தனது பிறந்த நாளாகிய இன்று, சிறுவர் சீர்திருத்தப்பள்ளி மற்றும் முதியோர் இல்லத்துக்குச் சென்று உதவிகள் வழங்கினார். காலையில் குன்றத்தூர் அருகேயுள்ள ' லிட்டில் ட்ராப்ஸ்' காப்பகத்திற்கு விஜயம் செய்தார்.
அங்கு தங்கியுள்ள 400க்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு வேண்டிய, உணவுப்பொருட்களை வழங்கினார். அத்துடன் அவர்களுக்கான படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதற்காக 50 ஆயிரம் ரூபாய்களுக்கான காசோலையையும் காப்பகத்திற்கு வழங்கினார்.
மதியம் புரசைவாக்கம், மற்றும் ராயபுரத்தில் உள்ள ஆன், பெண், சிறுவர்களுக்கான அரச சீர்திருத்தப்பள்ளிகளுக்குச் சென்று, அங்குள்ள சிறுவர்களுடன் கலந்துரையாடினார். கார்திக்கைக் கண்ட சிறுவர்கள் அவருடன் மகிழ்ச்சியோடு உரையாடினார்கள்.
பருத்தி வீரன், பையா பட வசனங்களைப் பேசிக் காட்டும்படி கேட்க, கார்த்திக்கும் பேசி க்காட்டினார். அவற்றைக் கேட்டு மேலும் சிறுவர்கள் உற்சாகமாகினார்கள். பின் அவர்கள் அனைவருக்கும் பிரியாணி விருந்து வழங்கினார். அத்துடன் அவர்களுக்குத் தேவையான பொருட்களையும் கொடுத்து உதவினார்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கார்த்தி மக்கள் நல மன்றத்தினர், மே 25ந் திகதி அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அன்னதானம், கண்தானம், இரத்ததானம், நோட்டுப் புத்தகங்கள் வழங்கல், மரக்கன்றுகள் நடல் ஆகிய மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டார்கள்.