நடிகர் அஜீ்த்துக்கு இன்று 40வது பிறந்தநாள்!

பொதுவாக பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர் அஜீத். குறிப்பாக ரசிகர்கள் இதையொட்டி பெரும் செலவு செய்ய வேண்டாம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்த ஆண்டு, பிறந்தநாளின் போது அஜீத் ஊரில் இல்லை. பார்முலா 2 பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இப்போது ஸ்பெயின் நாட்டில் பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்று வரும் அவர், அடுத்து மொராக்கோ செல்கிறார். எனவே தொடர்ந்து வெளிநாட்டிலேயே இன்னும் வாரங்கள் தங்கியிருப்பார்.
இதனால் தனது ரசிகர்கள் யாரும் சென்னையில் உள்ள தனது வீட்டுக்கு வரவேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார் அஜீத்.
அவர் வேண்டாம் என்று சொன்னாலும் தமிழகம் முழுவதும் அஜீத் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் எளிய நற்பணிகள் மூலம் கொண்டாடி வருகின்றனர்.
அன்னதானம், ரத்ததானம், இலவச உடைகள், நோட்டுப் புத்தகங்கள் தருதல் என பல உதவிகளை சென்னை, மதுரை ரசிகர்கள் செய்து வருகின்றனர்.
கார் பந்தயங்களை முடித்துவிட்டு சென்னை திரும்பும் அஜீத் இரு புதிய படங்களில் நடிக்கவிருக்கிறாராம்!
Blogger இயக்குவது.