மீண்டும் கார்த்தி-தமன்னா கூட்டணி!

பருத்தி வீரனில் கிராமத்து முரட்டு இளைஞராக நடித்து வெற்றி பெற்ற கார்த்தி, தற்போது நகரத்து மாடர்ன் இளைஞனாகவும் நடித்து வெற்றி பெற்றுள்ளார் – பையா படம் மூலம்.
பையா படத்தில் கார்த்தி, தமன்னா இடையிலான கெமிஸ்ட்ரி அட்டகாசமாக இருப்பதாக கோலிவுட்டிலும், ரசிகர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது. இந்த நிலையில், மீண்டும் தமன்னாவுடன் இணைகிறார் கார்த்தி.
இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கப் போகிறாராம் கார்த்தி. அவருக்கு ஜோடி போடுகிறார் தமன்னா. படத்தில் அதிரடியான காட்சிகள் பல இருக்குமாம். அதேபோல, காதல் காட்சிகளும் கலர்புல்லாக இருக்கும் என்கிறார்கள்.
இந்தப் படத்தின் கேரக்டருக்காக இப்போதே ஸ்டடியில் இறங்கியுள்ளாராம் கார்த்தி.