ரோஜா முதல் ராவண் வரை… புத்தகமாய் மலரும் ரஹ்மானின் நினைவுகள்

ஏஆர் ரஹ்மான் இப்போது ஒரு புத்தகம் தயாரித்துக் கொண்டிருக்கிறார். புத்தகம் என்றதும் ஏதோ வாழ்க்கை வரலாறு எழுதுகிறார் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இது ஒரு புகைப்பட ஆல்பம் மாதிரி என்று வைத்துக்கொள்ளலாம்.
ஆங்கிலத்தில் இதனை ‘காஃபி டேபிள் புக்’ என்பார்கள். ஒரு காஃபி குடிக்கிற நேரத்தில் புரட்டிப் பார்த்துவிடும் அளவுக்கு சிக்கனமான வர்ணனைகளுடன் கூடிய புகைப்பட ஆல்பம்!
தான் முதன் முதலில் இசையமைத்த ரோஜா முதல் இப்போது இசையமைத்துக் கொண்டிருக்கும் ராவண் வரை, அத்தனைப் படங்களிலும் ரஹ்மானுக்காகப் பாடிய பாடகர்கள், பாடல் பதிவின்போது எடுக்கப்பட்ட மறக்கமுடியாத புகைப்படங்கள் போன்றவற்றை இதில் பதிவு செய்திருக்கிறார்.
ஒவ்வொரு புகைப்படத்தின் அருகிலும் அந்த சம்பவம் குறித்த ரஹ்மானின் கமெண்டுடன் இந்தப் புத்தகம் தயாராவதாகச் சொல்கிறார் அவரது மீடியா மேனேஜர் நிகில்.
இந்தப் புகைப்படங்களை ஆடியோ மீடியா நிறுவனத்தின் உரிமையாளரும் ரஹ்மானின் நண்பருமான செல்வகுமார் எடுத்துள்ளார்.
மணிரத்னத்தின் ராவண் படம் வெளியாகும்போது, இந்த புத்தகமும் வெளியாகும் என்கிறார் நிகில்.
Blogger இயக்குவது.