தமிழ் சினிமா 2009 – முக்கிய நிகழ்வுகள்
ஜனவரி
2 – நடிகர் எம்.ஜி.சி.சுகுமார் மரணமடைந்தார். இவர் எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்ரபாணியின் மகன்.
31- நகைச்சுவைத் திலகம் நாகேஷ் மரணமடைந்தார்.
பிப்ரவரி
1- நடிகை சங்கீதாவுக்கும், பாடகர் கிரீஷுக்கும் திருமணம் நடந்தது.
5- காவ்யமாதவனுக்கும் குவைத்தில் பணியாற்றி வரும் நிஷால் சந்திராவுக்கும் திருமணம் நடந்தது.
22 – நடிகை விநோதினி தொழிலதிபர் ஸ்ரீதரை மணந்தார்.
23 – இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்று இந்திய இசை ரசிகர்களை சந்தோஷக் கடலில் மூழ்கடித்தார்.
மார்ச்
1 – நடிகை மதுமிதா, தெலுங்கு நடிகர் சிவபாலாஜியை மணந்தார்.
12 – நகைச்சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மரணமடைந்தார்.
18 – ஆசினின் டச்சப் மேன் நல்லமுத்துக்குமார் மாயமாகி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஏப்ரல்
26 – ஸ்டண்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமார் மரணம்.
27 – இந்தி நடிகர் பெரோஸ்கான் மரணம்.
30 – பிரஷாந்த், கிரகலட்சுமி திருமணம் செல்லாது என குடும்ப நல கோர்ட் தீர்ப்பு.
மே
2 – நடிகர் பாலாஜி மரணம்.
25 – சேது பட நாயகி நடிகை அபிதாவுக்குத் திருமணம் நடந்தது.
ஜூன்
4 – நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி திருமணம் நடந்தது.
ஜூலை
12- நடிகை மீனாவுக்கும் பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகருக்கும் திருமணம் நடந்தது.
ஆகஸ்ட்
2 – நடிகை ராக்கி சாவந்த், டிவியில் சுயம்வரம் நடத்தி எலேஷ் பருஜன்வாலா என்பவரை தனது கணவராக தேர்வு செய்தார். ஆனால் இப்போது இந்த ஜோடி டமால் டுமீல் என பிரிவது உறுதியாகி விட்டது.
6- மலையாள நடிகர் முரளி மரணம்.
12- விவகாரத்து கேட்டு சோனியா அகர்வாலும், செல்வராகவுனும் கோர்ட் படியேறினார்கள்.
16 – சினேகாவுக்கு காதல் எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக கூறி பெங்களூரைச் சேர்ந்த ராகவேந்திரா என்பவரைப் போலீஸார் கைது செய்தனர்.
28 – பிரகாஷ் ராஜின் மனைவி ரூ. 2 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு குடும்ப கோர்ட்டில் மனு செய்தார்.
செப்டம்பர்
7 – காஞ்சிவரம் சிறந்த படமாக தேசிய விருது பெற்றது. பிரகாஷ் ராஜுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது.
28 – கலைஞானி கமல்ஹாசனின் திரையுலக பொன்விழாவை விஜய் டிவி பிரமாண்ட விழா எடுத்துக் கொண்டாடியது.
அக்டோபர்
2 – வீட்டில் விபச்சாரம் செய்ததாக நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார்.
21 – விக்ராந்த், மானசா திருமணம் நடந்தது.
நவம்பர்
22 – ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவை மணந்தார்.
28 – ஆசின், பரத், தேவிப்பிரியா உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
டிசம்பர்
8 – திரைப்பட விருது விழா. ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான விருதுகள் வழங்கப்பட்டன. முதல்வர் கருணாநிதிக்கு சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருதை கமலும், ரஜினியும் இணைந்து அளித்தனர்.